தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளி யம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 401 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.



பூஜையின்போது நாட்டில் மழை வளம் பெருகி, விவசாயம் செழித்து, வறட்சி நீங்கி, உலகில் அன்பும் அமைதியும் நிலவ வேண்டியும், அனைவரும் அனைத்து செல்வங்களுடன் நலமுடன் வாழ வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது.



மேலும், கணவர்களின் ஆயுள் நீடிக்கவும், குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சிறக்கவும், நோய் நொடியின்றி அனைவரும் வாழவும், தொழில் வளம் பெருகவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டி பஜனைப் பாடல்களுடன் திருவிளக்குகள் ஏற்றி தீப அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியில் கோவில் செயலாளர் கார்த்திக்ராஜா, பொருளாளர் செல்வராஜ், துணைத் தலைவர்கள் அசோகன், தனபால், திருப்பணிக் குழு முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ஆறுமுகச்சாமி செய்திருந்தார்.