தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.பி.ஆர். நகர் பகுதியில், முன்னாள் எம்எல்ஏ சண்முகையாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த புதிய ரேஷன் கடையை, தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ஆர். ரெங்கசாமி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டதன் மூலம், ஆர்.எஸ்.பி.ஆர். நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எளிதாகவும் வசதியாகவும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திறப்பு விழாவில் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தனுஷ் பாலன், தொமுச நிர்வாகிகள் முத்துராஜ், பால்ராஜ், செல்வராஜ், முத்துமணி, மற்றும் ராஜகுமாரசாமி, இ.பி. செல்வராஜ், வீரப்பன், சண்முகவேல், ராஜாமணி, பி.எஸ்.என்.எல்.சண்முகையா, பாலசுப்பிரமணியன், மதி பிரகாஷ், ஜி. பாலசுப்பிர மணியன், ஜவஹர், முகமது நூர்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.