தூத்துக்குடி தாமோதரநகரில் உள்ள ஸ்ரீசெல்வவிநாயகர் ஸ்ரீசந்தனமாரி அம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
தாமோதரநகர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஸ்ரீசந்தனமாரி அம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தொடர்ந்து 8 நாட்கள் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.



கொடைவிழாவையொட்டி ஸ்ரீசெல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீசந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



இதன் தொடர்ச்சியாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலகில் அன்பும் அமைதியும் நிலவ வேண்டும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடை வெயிலின் தாக்கம் குறைய வேண்டும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், அனைவரும் நலமுடன் வாழ வேண்டும், அனைத்து மக்களையும் இறைவன் காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வேண்டுதல்களுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.



பஜனைப் பாடல்களுடன் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் தலைவர்கள் வெள்ளத்துரை,



வெற்றிவேல், செயலாளர் அந்தோணிராஜ், பொருளாளர் சடகோபன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அருணாச்சலம், நாகராஜன், அமிர்தராஜ், ராஜேந்திரன், சுதாகர், பழனிச்செல்வம், பால கிருஷ்ணன், குழந்தைவேல், கண்ணன், கருணாகரன், ராஜ், ஜோசப், தனேஷ்குமார், கார்த்திக்செல்வம், திவாகர், விஜய்ஆனந்த், கௌரவ ஆலோசகர்கள் கோதாண்ட ராமன், கார்மேகம், மாரியப்பன் மற்றும் கோவில் இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.