நேபாளத்தின் வடக்குப் பகுதியில் ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக, போடேகோஷி எல்லை நதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந் துள்ளனர். நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பலர் காணாமல் போயுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையிலும் தூத்துக்குடி புனித லசால் பள்ளி சார்பில் மெளன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரர் இராபர்ட் தலைமையில் நடைபெற்ற இந்த மெளன அஞ்சலி நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 1,000 பேர் கலந்து கொண்டு, நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
துயரத்தில் சிக்கியுள்ள நேபாள மக்களுக்கும், உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.