சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் புலித்தேவனின் 311வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவனின் 311வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரன் புலித்தேவனின் உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர் வழக்கறிஞர் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, அருண்குமார், பழனி, பிரபு, அருணாதேவி, குபோ இளம்பரிதி, டினோ, பெனில்டஸ், ஜேசையா, மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், ஜெயக்கனி, முருக இசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், நைஸ் பரமசிவம், வழக்கறிஞர் ரூபராஜா, ரவி, ராஜேந்திரன், வினோத் ஆகியோரும் பங்கேற்றனர்.
வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, சதீஷ்குமார், கங்காராஜேஷ், சுப்பையா, டென்சிங், செல்வராஜ், மூக்கையா, சந்தனமாரிமுத்து, சக்திவேல், முனியசாமி, சுரேஷ்மகாராஜா, செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சக்திவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதேபோல், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வரி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், கண்ணன், மரியகீதா, மகேஸ்வரி, விஜயக்குமார், ஜான்சிராணி, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், ரஜினிமுருகன், அவைத் தலைவர் அற்புதராஜ் மற்றும் மணி, முரளிதரன், ஆடிட்டர் சிவராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாவீரன் புலித்தேவனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.