தூத்துக்குடி வ.உ.சி. சந்தை ஐக்கிய வியாபாரிகள் சங்க மகாசபைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் மரகதராஜ் வரவேற்புரை யாற்றினார்.



கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், சங்கத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வியாபாரிகளின் நலன் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன. கூட்டத்தில் சங்கத் தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ் ஆகியோர் பேசுகையில், வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு காரணங்களால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.



இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, பல்வேறு அமைப்புகளின் புகார்களின் அடிப்படையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.



அதன்படி, வ.உ.சி. சந்தை பகுதியிலும் உள்ள சில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே, மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றுவதற்கு துணை புரிவோம். “நம் தொழிலுக்கு நாமே பாதுகாப்பு” என்ற அடிப்படையில் அனைவரும் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.



தொடர்ந்து, சங்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் நீண்டகால உழைப்பை பாராட்டும் வகையில் “உழைப்பின் சிகரம்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.



விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வணிகர்கள் சங்க பேரவை மாவட்டத் தலைவர் சோலையப்பராஜா, பொருளாளர் ஆனந்தகுமார், ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைத்தலைவர்கள் பட்டுராஜா, சண்முகராஜ், துணைச் செயலாளர்கள் காஷ்மீர், செல்வசேகர், உத்திரபாண்டி, கௌரவ ஆலோசகர்கள் செல்வக்குமார், சண்முகம், கதிரேசன், குருசாமி, ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எட்வர்ட், வெள்ளைச்சாமி, காசிராஜன், செல்வக்குமார், ஜெயராமர், திசைக்கரை ராஜா, ராஜாசங்கர், கணேசன், ராஜ்குமார், ஜான்சன் கணேசன், கருணாகரன், முருகேசன், பாலசுப்பிரமணியன், ரவிசேகர், அன்பழகன், இசக்கிமுத்து மற்றும் ஐக்கிய நாடார் சங்க செயலாளர் செந்தில்குமார் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.