தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியான விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 4-வது நாளாக ஆஜராகி கையெழுத்திட்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக நிர்வாகிகள் மீது பெண்கள் கூறி வரும் பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். “பெண்களின் கண்ணீர் திவலைகள் இந்த ஆட்சியை கரைக்கும்” எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.



தொடர்ந்து, “திமுக–பாஜக நேரடியாக கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருக்கிறாரே?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆடு நனைகிறதே என்று ஓநாய் விரட்டப்பட வேண்டியதில்லை” என மார்க்கண்டேயன் பதிலளித்தார்.



ரஜினிகாந்துக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, “நோ கமெண்ட்ஸ்” என அவர் தெரிவித்தார்.