தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் மற்றும் சிவனணைந்த பெருமாள் கோவில் கொடைவிழா சிறப்பாக நடைபெற்றது.
கொடைவிழாவையொட்டி கடந்த 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் திருவிளக்கு பூஜையுடன் சுவாமிகளுக்கு கும்பம் ஏற்றும் பூஜையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 8 நாட்கள் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடைவிழாவின் 8-ம் நாளான வெள்ளிக்கிழமை மதியம் சிறப்பு கொடை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
நிகழ்ச்சியில் கோவில் தலைவர் லிங்கசெல்வன், செயலாளர் வேல்மணிமுருகன், பொருளாளர் செல்வராஜ், கொடைவிழா பொருளாளர் வெள்ளத்துரை, துணைத்தலைவர் பொன்ராஜ், துணைச்செயலாளர் ஜெயக்குமார், தணிக்கையாளர்கள் ஜெயபாண்டி, சிவக்குமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கமாரியப்பன், சண்முகசுந்தரம், முத்துமாரியப்பன், சூர்யகாந்த், சதீஷ்குமார், சுரேஷ், குமரன், சிவலிங்கம், காசிலிங்கம், சுந்தர், கணேசன், தனபாலன், சௌந்தர்ராஜன், பட்டு ஜோதிடர், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், கோவில் வார வழிபாட்டு மாதர் சங்கத்தினர், கோவில் கைங்கர்ய பக்தர்கள், சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.