தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை மெர்லின் பாக்கியவதி தலைமையில் நடைபெற்ற பேரணியில், பள்ளி மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.



போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இளைஞர்கள் போதைப் பழக்கத் திலிருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி திரையில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.



மாணவிகள் மத்தியில் போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்களிப்பு குறித்தும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.