தூத்துக்குடி அய்யனடைப்பு–கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடத்தில், ஆடி 27-ம் தேதி புதன்கிழமையான இன்று (12.08.2026), மகாளய அமாவாசையை முன்னிட்டு மதியம் 1.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது.
வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், மன அமைதி ஏற்படும், செல்வ வளம் பெருகும், தீராத நோய்கள் தீரும், கடன் தொல்லைகள் நீங்கும், அரசியலில் மேன்மை கிடைக்கும், முன்னோர்களின் சாபம் நீங்கும், தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும், முன்ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி மற்றும் கால பைரவரை வழிபட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் மற்றும் ஸ்ரீ கால பைரவர் சித்தர் பீட அறக்கட்டளை, பிரத்தியங்கிரா தேவி பீடம், அய்யனடைப்பு–கோரம்பள்ளம் சார்பில் செய்திருந்தனர்.