தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் தேசிய நூலகர் தின விழா புதன்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி நூலகக் குழு சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்து கொண்டார். அவர், “வாசிப்பு பக்கங்களைக் கடந்து பயணிக்கும் அனுபவம்” என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.



அப்போது வாசிப்பின் முக்கியத்துவம், புத்தகங்கள் வாயிலாக அறிவையும் அனுபவத்தையும் பெறும் விதம், வாசிப்பு வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத் தார். தொடர்ந்து மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமாக பதிலளித்தார்.



விழாவிற்கான ஏற்பாடுகளை நூலகக் குழு ஒருங்கிணைப் பாளர் மற்றும் செயலர் முரளிதரன், கல்லூரி முதல்வர் முனைவர் சூர்யகலா, பேராசிரியைகள் முனைவர் லாவண்யா, முனைவர் சுதாகுமாரி மற்றும் கல்லூரி நூலகர் பொன்செல்வி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.