புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ். குட்டி பாண்டியன், அக்கட்சியின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப் பாளராக கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப் பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் இளம் புரட்சியாளர் பூவை எம். ஜெகன் மூர்த்தி வெளி யிட்டுள்ளார். கட்சியின் வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமைக்கும் பாடுபட்டு, கட்சியின் சட்ட விதிகளை முறையாகக் கடைபிடித்து கட்சிப் பணியாற்ற வேண்டும் எனவும், புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
புதிய பொறுப்பு குறித்து எஸ். குட்டி பாண்டியன் கூறுகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வந்த தன்னை கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப் பாளராக நியமனம் செய்த கட்சித் தலைவர் பூவை எம். ஜெகன் மூர்த்தி அவர்களுக்கும், தன்னைப் பரிந்துரை செய்த கட்சியின் பொதுச் செயலாளர் ருசேந்திரகுமார் அவர்களுக்கும், மாநிலச் செயலாளர் பரணி மாரி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும், தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி, கட்சியின் கொள்கைகள் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் எஸ். குட்டி பாண்டியன் தெரிவித்தார். புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள எஸ். குட்டி பாண்டியனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.