தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டம், புனித மரியன்னை மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.



கூட்டத்திற்கு தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்க மாநிலத் தலைவர் சுரேஷ், மாநிலச் செயலாளர் சொர்ணவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவர் மருதப்பெருமாள், மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில், மாவட்டத் தலைவராக பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளராக தங்கராஜ், பொருளாளராக சிவன்ராஜ், துணைத் தலைவராக சின்னத்தம்பி, துணைச் செயலாளராக தாமஸ் போஸ்கோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.



மேலும், செயற்குழு உறுப்பினர்களாக அரிராமன் ராணி, சரவணன், நிக்சன், மகாலட்சுமி, பிரவீனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காது கேளாதோர் மக்களின் உரிமைகள், நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் கூட்டம் நிறைவடைந்தது.