தூத்துக்குடி மாநகராட்சியில் நகரை அழகுபடுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் பொது சுவர்களில் அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல், கடல்வாழ் உயிரினங்கள், தூய்மை விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.



பொது சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை பொதுமக்கள் தவிர்த்து, மாநகராட்சியின் நகர அழகுபடுத்தும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், சுவர் ஓவியங்களை சேதப்படுத் துவோர் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆணையர் பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.



இப்பணிக்கு ஆதரவளிக்க விரும்பும் தன்னார்வலர்கள், பொதுமக்கள், கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்காவை தொடர்புகொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.