தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சில்வர்புரத்தில் ஐஎன்டியுசி சார்பில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.



மாவட்ட பிரபு மன்ற தலைவர் குமாரமுருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐஎன்டியுசி மாநில செயலாளர் ராஜ், 1-வது வார்டு காங்கிரஸ் தலைவர் வேல்குமார், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சோலையப்பராஜா, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஐஎன்டியுசி சுப்பிரமணியன், ராஜா, வார்டு தலைவர் தாமஸ், வார்டு செயலாளர் சின்ன ராஜா, இளைஞர் காங்கிரஸ் ரென்னீஸ் பாபு, முத்துராஜ், ரமேஷ் சந்தனசதீஷ், சங்கர் கணேஷ், அரசகுமார், சதீஷ், மோகன், வருண், மனோகரன், சவரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.