பருவநிலை மாற்றம் காரணமாக இயற்கையாக கிடைக்கும் மழைநீரை சேமிப்பது அவசியம் என்பதால், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



பருவகாலச் சூழ்நிலைகள் மாறிவரும் நிலையில், இயற்கையாக கிடைக்கக்கூடிய மழைநீரை முறையாக சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. மழைநீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், நிலத்தடி நீரின் உவர்ப்புத் தன்மையும் குறைந்து, பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாறும்.
எதிர்பாராத வறட்சி காலங்களில் மாநகரப் பகுதிகளில் குடிநீர் தேவைக்காக பயன் படுத்தக்கூடிய நீர்நிலைகள் போதிய அளவில் இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு வீடு மற்றும் கட்டிடத்திலும் மழைநீரை முறையாக சேகரித்து சேமித்து வைக்கும் அமைப்பை ஏற்படுத்துவது இன்றியமை யாததாகும்.



இதனால் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களின் உரிமை யாளர்களும் தங்களது சொந்த பொறுப்பில் மழைநீர் சேமிப்பு அமைப்பை உடனடியாக ஏற்படுத்தி, நீராதாரத்தை பெருக்குவதற்கான மாநகராட்சியின் நடவடிக் கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.



மழைநீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, மாநகராட்சி நகரமைப்புப் பிரிவை நேரில் அணுகி தேவையான ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.