தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொம்மல்நகர் பகுதியில் அமைந்துள்ள முத்துவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை யொட்டி நடைபெற்ற அன்ன தானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கோவிலில் சாமி தரிசனம் செய்த கீதாஜீவன், தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டலத் தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, பொறியாளர் அணி துணைச் செயலாளர் சின்னத்துரை, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.