தூத்துக்குடி தாளமுத்துநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.



தாளமுத்துநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை அருகிலிருந்து தொடங்கிய பாதயாத்திரைப் பிரச்சாரப் பயணத்திற்கு மாநகர செயலாளரும் கவுன்சிலருமான தனலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கரும்பன் சிறப்புரையாற்றி, பாதயாத்திரைப் பிரச்சாரப் பயணத்தை தொடங்கி வைத்தார்.



கிளைச் செயலாளர் அந்தோணி சௌந்தர்ராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஞானசேகர், மாநகரப் பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் பாதயாத்திரைப் பயணத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.
இந்தப் பயணம் தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, டேவிஸ்புரம், சவேரியார்புரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற்றது. ஒவ்வொரு சந்திப்பிலும் மாநகர துணைச் செயலாளர் மாடசாமி, வழக்கறிஞர்கள் கணபதி, சுப்ரமணியன், முத்துலட்சுமி, தாமரைச்செல்வன், மனோன்மணி ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர்.



மாநகரக் குழு உதவிச் செயலாளர் ஜீவா, மாநகரக் குழு உறுப்பினர்கள் ராமன், முனியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.