தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் ஓண்டிவீரனின் 255-வது நினைவு நாளையொட்டி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஓண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று ஓண்டிவீரன் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்ததுடன், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஓண்டிவீரன் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஓண்டிவீரன் கலை பண்பாட்டு மையம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசுகளை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கி, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தலைவர் முருகேசன், செயலாளர் சங்கரன், பொருளாளர் ராமசந்திரன், உறுப்பினர்கள் பால்ராஜ், முருகன், கணபதி, நீலமேகம், சுப்பிரமணியன், இராமசந்திரன், ராமமூர்த்தி, சுந்தர்ராஜ், கன்னியப்பன், நமச்சிவாயம், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ரவிந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அருண்குமார், பழனி, அந்தோணிஸ்டாலின், பிரபு, அருணாதேவி, குபேர் இளம்பரிதி, கணேஷ்குமார், மாநகர அணி நிர்வாகிகள் ஜெயக்கனி, பால்ராஜ், கருப்பசாமி, தனபால், பெரியசாமி, பரமசிவம், பெல்லா சந்தனமாரி, வக்கீல் ரூபராஜா, முருகஇசக்கி, ரவி, வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, சிங்கராஜ், சதீஷ்குமார், சந்தனமாரிமுத்து, கங்காராஜேஷ், சுப்பையா, ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சக்திவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வரி, மரியகீதா, பவாணி, பகுதி அணி அமைப்பாளர் காசிராஜன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், பகுதி துணைச் செயலாளர் ரேவதி, முரளிதரன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஓண்டிவீரனின் தியாகத்தையும் நினைவையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியுடன், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.