தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட இராஜபாளையம் மெயின் ரோட்டில், அன்னை தெரசா பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா அறக்கட்டளையின் 8-ம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



விழாவையொட்டி அன்னை தெரசாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னை தெரசாவின் பிறந்த நாள் மற்றும் அறக்கட்டளையின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.



நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் தொம்மை அந்தோணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரமேஷ், பொருளாளர் முத்து முனியசாமி, செயலாளர் விமல், துணைச் செயலாளர் வினோத்சிங், அமைப்பாளர் ஜெயசீலன், துணை அமைப்பாளர் முத்துக்குமார், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் தீபக் ஏஜென்சி உரிமையாளர் தீபக் மற்றும் திமுக மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.