தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ்நாடு பவர் லிமிடெட் (NTPL), கல்லூரியின் கணினி அறிவியல் துறை மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் (உன்னத் பாரத் அபியான்) சார்பில் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.



கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் த. குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபானா, தேர்வாணையர் அருட்சகோதரி கு. ரீத்தா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் அ. ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் முகாமிற்கு தலைமை தாங்கினர்.



தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பி. ஜெகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். NTPL மனிதவளத் துறை இணை மேலாளர் ரகுபதியும் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தார்.
UBA & CDP ஒருங்கிணைப்பாளர் முனைவர் S. புலோமின் ரெஜி, கணினி அறிவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் சே. அனிலா மயிலி, உதவிப் பேராசிரியரும் CDP பொறுப் பாளருமான முனைவர் S. மேரி செல்வி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர்.



முகாமில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பார்வைக் குறைபாடு கண்டறியப் பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப் பட்டதுடன், கண் கண்ணாடி களும் இலவசமாக வழங்கப் பட்டன. மேலும், கண்புரை அறுவை சிகிச்சை தேவைப் பட்டவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.



கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பார்வைக் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கும் வகையில் நடைபெற்ற இம்முகாம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.