தூத்துக்குடி 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான மினிமராத்தான் ஓட்டப்பந்தயம் “போதை இல்லா தமிழகம்” என்ற தலைப்பில் நடைபெற்றது.



ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் பாட்டில் கிருஷ்ணா பப்ருவான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக் கேடயத்துடன் முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 13-வது இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000 ஊக்கப் பரிசாக வழங்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து “பெண்கள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆண், பெண் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன.



போட்டிகளை அனல்மின் நிலைய விளையாட்டு அலுவலர் மங்கள ஜெயபால் தலைமையில் ராஜா முகமது, ஜெபராஜ், சிவகுமார், முகமது அலி, பெத்துராஜ், பிரத்திபன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளரும் அனல்மின் நிலைய பாதுகாப்பு அதிகாரியுமான கிருஷ்ண வேணி, தொழிலக சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் விமலா தேவி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்க அதிகாரி அமுதா, தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒப்பந்தப் பணியாளர்கள், இதுபோன்ற போட்டிகளை வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், கபடி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட கூட்டு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஒப்பந்தக்காரர்களுக்கும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் இடையே அண்ணன்–தம்பி போன்ற சகோதர பாசத்துடன் நல்லுறவு நிலவி வருவதாகக் கூறி, ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தினரை பாராட்டினர்.



நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஒப்பந்தக்காரர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், விழாக்குழுவினர், விளையாட்டு அலுவலர் மற்றும் அவரது குழுவினருக்கு சங்கத்தின் பொருளாளர் பாக்கியம் நன்றி தெரிவித்தார்.



மேலும், அருண் நர்சரி உரிமையாளர் கார்த்திக் மற்றும் ஒளி–ஒலி அமைப்பு செய்த எஸ்.ஆர். சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மூர்த்தி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் அன்புராஜ் ஜெபசிங், செயலாளர் ஹீரா ஜான் மற்றும் ஒருங்கிணைப் பாளர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.