தூத்துக்குடி சிதம்பரநகர் 1-வது தெருவில் அமைந்துள்ள தி பார்க் கிண்டர்கார்டன் வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விஜயலட்சுமி குழும நிறுவனங்கள் மற்றும் பார்க் குழும கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா பெருமாள்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரத்தின் மதிப்பு, தேசப்பற்று மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



நெஸ்ட் மான்டெஸ்ஸோரி இயக்குநரும் ஒருங்கிணைப் பாளருமான செல்வி இளவரசன் வரவேற்புரையாற்றினார். ஓய்வுபெற்ற மாஸ்டர் சீஃப் பெட்டி ஆபீசரும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான வில்சன் தர்மராஜ் சுதந்திர தின உறுதிமொழியை வழி நடத்தினார். இதனைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



விழாவில் தி பார்க் கிண்டர்கார்டன் மற்றும் நெஸ்ட் மான்டெஸ்ஸோரி பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவர்களின் தேசப்பற்று மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.



விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு தலைமை விருந்தினர் அர்ச்சனா பெருமாள்சாமி விருதுகளை வழங்கி பாராட்டினார். விழாவின் நிறைவில் டாக்டர் முத்துக்குமார் நன்றியுரை வழங்கினார்.