தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை ஸ்டேட் பேங்க் காலனி மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பக்தர்களுக்கு உணவு வழங்கினார். முன்னதாக அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்டேட் பேங்க் காலனி மாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 31-ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஜனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கொடை விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அன்னதானத்தில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கோவில் தலைவர் கணேசன், செயலாளர் சேகர், பொருளாளர் ராஜசீலன், துணைத்தலைவர் கருப்பசாமி, துணைச்செயலாளர் சுப்புராஜ், துணைப் பொருளாளர் நரேஷ்குமார், விழாக்குழு தலைவர்கள் சந்தனமாரிமுத்து, முக்காண்டி, சுந்தர், பாலா, மணிகண்டன், முருகன், முனீஸ்வரன், முனியசாமி, சேகர், கண்ணன், திமுக பகுதி செயலாளர் சுரேஷ்குமார், பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பர், பிரபாகர் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.