தூத்துக்குடி பிரையண்ட் நகர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட, அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழா ஆகஸ்ட் 6 முதல் 12-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



விழாவையொட்டி கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை கால் நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து, விழாவின் முதல் நாளான ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சிலம்பம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், இரவு எஸ்.ஆர். சந்திரன் வழங்கும் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.




ஆகஸ்ட் 7-ம் தேதி சிறப்பு திருவிளக்கு பூஜையும், ஆகஸ்ட் 8-ம் தேதி சிலம்பம், பரதநாட்டியம் மற்றும் தெய்வீக நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆகஸ்ட் 9-ம் தேதி மகளிருக்கான கோலப்போட்டி மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆகஸ்ட் 10-ம் தேதியான இன்று மாலை கும்மிப்பாட்டு நிகழ்ச்சியும், இரவு அம்மன் அருள் குறித்து ஆன்மிக சொற்பொழிவும், தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் காப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆகஸ்ட் 11-ம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், தீர்த்தவாரி, சிறப்பு வில்லிசை, மதியம் கொடை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு சாமக்கொடை, தொடர்ந்து வாணவேடிக்கை மற்றும் அம்மன் சப்பர பவனியும் நடைபெற உள்ளது.



விழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 12-ம் தேதி அதிகாலை வாசலில் பொங் கலிடுதல், மதியம் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடை விழா நிறை வடைகிறது. கொடை விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு கோவில் நிர்வாகிகள் U. முத்துராஜன் நாடார், C. சதாசிவன் நாடார், S. ஐகோர்ட் துரை நாடார் மற்றும் 50-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் செ. சரவணகுமார் ஆகியோர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.