தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் பரிந்துரையின் பேரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகள் மற்றும் துணை, இணை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இதையடுத்து, புதிய நிர்வாகிகள் அனைவரும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்தார்.



மேலும், கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலப் பணிகளையும் முன்னெடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று புதிய நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது மாவட்ட துணைத் தலைவர் பி.ஜே.சி. சுரேஷ், காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் சேவியரம்மாள், மாவட்ட செயலாளர்கள் ஜோனர்தன், ராபின், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆண்ட்ரூஸ் ஜாப்ரின், ஆலன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்டாலின், மாவட்ட துணைத் தலைவர் ராஜாராம் உள்ளிட்ட மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.