தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியின் தன்னாட்சி சார்பில் சர்வதேச இளைஞர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. “இளைஞர்களே உலகின் நம்பிக்கை” என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இவ்விழாவில், நிலையான வளர்ச்சி இலக்குகளான தரமான கல்வி, அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
விழாவில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜெசி பெர்னாண்டோ சிறப்புரை யாற்றினார். கல்லூரியின் செயலாளர் முனைவர் குழந்தை தெரஸ், முதல்வர் முனைவர் சிபானா, துணை முதல்வர் முனைவர் எழிலரசி மற்றும் எஸ்.எஸ்.சி. இயக்குநர் முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் திரளான மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான முனைவர் மரியசாந்தி, லூகாஸ் ரெக்சலின், மரிய சுமதி, மரிய ஹார்டினா அட்லின் வாஸ் மற்றும் முனைவர் திபுர்டியுஸ் ஆகியோர் செய்திருந்தனர்.