சுதந்திரப் போராட்ட வீரர் ஓண்டிவீரனின் 255-வது நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.



அப்போது அவர் பேசுகையில்,‌ “கல்வி என்ற செல்வம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் கல்வியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, எதிர்காலத்தில் என்ன லட்சியத்தை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும்” என்றார்.



நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் முருகேசன், துணைத்தலைவர் கணபதி, செயலாளர் சங்கரன், இணைச்செயலாளர் நீலமேகம், பொருளாளர் இராமச்சந்திரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பால்ராஜ், முருகன், சுப்பிர மணியன், இராமச்சந்திரன், ராமமூர்த்தி, விஜயராணி, சுதாராணி, நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாநில திமுக மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அருண்குமார், பழனி, அந்தோணிஸ்டாலின், பிரபு, அருணாதேவி, குபேர் இளம்பரிதி, கணேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



மாநகர அணி நிர்வாகிகள் ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், இ.பி. கருப்பசாமி, தனபால் பெரியசாமி, நைஸ் பரமசிவம், பெல்லா சந்தனமாரி, வக்கீல் ரூபராஜா, நலம் ராஜேந்திரன், முருகஇசக்கி, ரவி, சத்யா, சாகுல்ஹமீது ஆகியோரும் பங்கேற்றனர்.



வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, சதீஷ்குமார், சந்தனமாரிமுத்து, கங்கா ராஜேஷ், சுப்பையா, ரவீந்திரன், கதிரேசன், பத்மாவதி, செந்தில்குமார், மூக்கையா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சக்திவேல், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வரி, விஜயகுமார், பவாணி, பகுதி அணி அமைப்பாளர் காசிராஜன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், அருணகிரி, முரளிதரன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.