தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோரின் வழிகாட்டு தலின்படி, கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தினர், தங்களது குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவித்தொகை வழங்கக் கோரி பெருமாள்சாமி கதிர்வேலிடம் மனு அளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது தாய், தந்தையின் பெயரில் செயல்பட்டு வரும் விஜயலட்சுமி கதிர்வேல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், 3 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 12 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி தொடரவும், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.