தூத்துக்குடி மரக்குடி தெருவில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியார் கெபி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மாதா கோவில் பங்குத்தந்தை ஜான் செல்வம் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியார் கெபியை திறந்து வைத்தார். தொடர்ந்து இரண்டு பேருக்கு தையல் இயந்திரங்களும், சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.



புனித செபஸ்தியார் கெபியை புதுப்பித்து வழங்கிய தொழிலதிபர் நிக்சன், புனித அந்தோணியார் கெபியை வழங்கிய சார்லி மிசியர், புனித செபஸ்தியார் கெபியை கட்டி வழங்கிய மென்ட்லி கன்ஸ்ட்ரக்ஷன், இரண்டு தையல் இயந்திரங்களை வாங்கி வழங்கிய சம்சன் உள்ளிட்டோர் பல்வேறு நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



நிகழ்ச்சியில் பங்கு துணைத் தலைவர் அண்டோ, இணைச் செயலாளர் பெனட், முன்னாள் செயலாளர் கென்னடி, ஜோசப், முன்னாள் பொருளாளர் ஜாய், ரவி, எட்வின் பாண்டியன், ஸ்பெல்மன், சசிக்குமார், வர்கீஸ் உள்ளிட்டோர் மற்றும் புனித செபஸ்தியார் இளைஞரணி, மகளிரணியினர் கலந்து கொண்டனர்.