தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஐஎன்டியுசி யூனியன் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது.



தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளர் பெருமாள் சாமி கதிர்வேல் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற விழாவில், அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி ஐஎன்டியுசி கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.



நிகழ்ச்சியில் ஐஎன்டியுசி மத்திய சங்க பொருளாளர் தங்கவேல், தலைவர் உதயகுமார், பணி ஓய்வு மற்றும் பணிமனை நிர்வாகிகள், பழங்குடியினர் பிரிவு முனியசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் இக்னேஷியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ஆராய்ச்சித் துறை சிவராஜ் மோகன், மாநில மகிளா காங்கிரஸ் இணை ஒருங்கிணைப்பாளர் முத்து விஜயா, விவசாயப் பிரிவு பேரையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் நாராயணன், சுரேஷ்குமார், ஆனந்தராஜ், பிரைன்நாத், முருகேசன், ஜோக்கின்ஸ், கோபால், முத்துராஜ், ஜேசுராஜ், தர்மராஜ், செல்வம், முருகன், பாலன், மைக்கேல் ராஜ், கன்னிசாமி பாண்டியன் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் இசக்கியம்மாள், பேச்சியம்மாள், ஜெசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.