தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமையில், மேலிடப் பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் தனியார் மஹாலில் நடைபெற்றது.



கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுகையில், மாநிலத் தலைமையின் உத்தரவின்படி கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் வகையில் இயக்க மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். குறிப்பாக, பூத் கமிட்டி முதல் அனைத்து மட்டங்களிலும் கமிட்டிகளை அமைப்பதுடன், வார்டு அளவிலும் கமிட்டிகளை மறுசீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினர்.



கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், அருள், மண்டலத் தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், சேகர், மாநிலப் பேச்சாளர் அப்துல் மஜீத், ஊடகப் பிரிவு மண்டலத் தலைவர் ஜான் சாமுவேல், எஸ்.சி. துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு சேவியரம்மாள், மீனவர் காங்கிரஸ் சிமியோன், மகிளா காங்கிரஸ் இசக்கியம்மாள், ஆராய்ச்சித் துறை சிவராஜ் மோகன், சிறுபான்மைத் துறை மைதீன், ஐ.என்.டி.யு.சி. பாலகிருஷ்ணன், சுப்ரமணியன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வர்த்தக அணி அருள்வளன், ஊடகப் பிரிவு முத்துமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட துணைத் தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ஜெபராஜ், நாகேந்திரன், தனபால்ராஜ், சுரேஷ், பிரபாகர், பொதுச் செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் ஆண்ட்ரூஸ், செயலாளர்கள் ஜோனத்தான், கதிர்வேல், மாரியப்பன், ராஜ்குமார், அசன்பாத், இளைஞர் அணி நிர்வாகிகள் ரெனிஷ் பாபு, ஆலன், பொன்னரசி, பிராங்க்ளின் மற்றும் வார்டு தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் கட்சி அமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான விண்ணப்பங்கள் நிர்வாகிகளிடம் பெறப்பட்டன.