தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 82-வது பிறந்தநாள் விழா மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.



மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் சகாயராஜ் சார்பில், மண்டல தலைவர் ஐசன் சில்வா தலைமையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட சோனியா காந்தி பேரவை பொதுச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், அசன் பாத், மாவட்ட துணைத் தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ஜெபராஜ், பிஜேசி சுரேஷ், ராஜாராம், மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், அந்தோணி குரூஸ், ஜோனதன், செய்யது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், எஸ்.சி. துறை தலைவர் பிரபாகரன், மீனவர் காங்கிரஸ் துறை தலைவர் சிமியோன், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் சேவியரம்மாள், ஆராய்ச்சி பிரிவு தலைவர் சிவ்ராஜ் மோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரென்னிஸ் பாபு, கிழக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆலன் ஜோஸ்வா, இளைஞர் காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு பொன்னரசி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகி இசக்கியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



வார்டு தலைவர்கள் காமராஜ், முனியசாமி, மகாலிங்கம், மீனவர் காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் சகாய புஷ்பராஜ், வார்டு நிர்வாகிகள் ஜெய பாண்டியன், ஜோக்கின், பெனடிக்ட் செல்வராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.