தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தலின்படி, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் “REJECT MODI DELIMITATION” என்ற தலைப்பில் அமைதிப் பேரணி கோவில்பட்டியில் நடைபெற்றது.
கோவில்பட்டி காமராஜர் சிலை முன்பு காலை 10.30 மணிக்கு பேரணி தொடங்கியது. பேரணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. பெருமாள்சாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
பேரணி கோவில்பட்டி முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி மண்டபத்தை அடைந்தது. அங்கு அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் பேரணி நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர தலைவர் கே.டி.பி. அருண்பாண்டியன், வட்டார தலைவர் சி. ரமேஷ் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாவட்ட துணைத் தலைவர்கள் பெத்துராஜ், செல்லதுரை, INTUC பொதுச்செயலாளர் ராஜாசேகரன், மேடை சேர்மன், பி.சி.சி. உறுப்பினர் மகேஷ்குமார், வழக்கறிஞர் கருப்பசாமி பாண்டியன், வர்த்தக அணி தலைவர் ராஜா, விவசாய அணி தலைவர் பேரையா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அரவிந்த், சூப்பராயிலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டார மற்றும் நகர நிர்வாகிகள் விஜய் (ஓட்டப்பிடாரம் மேற்கு), ஞானராஜ் (விளாத்திகுளம் நகரம்), ஏ. ரவி (கருங்குளம்), மரியசூசைராஜ் (கோவில்பட்டி கிழக்கு), கே.ஆர். வேல்சாமி (புதூர் கிழக்கு), கழுகுமலை சங்கர், முத்துகிருஷ்ணன் (விளாத்திகுளம் மத்திய), போத்திராஜ் (விளாத்திகுளம் மேற்கு), சுரேஷ் (விளாத்திகுளம் கிழக்கு), ஞானராஜ் (நகர தலைவர்), தியாகராஜன் (புதுநகர் தலைவர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் தர்மர், பிரபாகரன், கண்ணன், தனலட்சுமி, மதி முத்து, விஜயா, பொம்மி, மணிக்கொடி, சண்முகவேல், கருப்பசாமி, குரு அந்தோனி, மாடசாமி, அய்யாசாமி, கோடாங்கி கருப்பசாமி, செல்லப்பாண்டி, அந்தோணிசாமி, கொம்பையா, பாண்டியராஜன், மணி, அருணாச்சலம், தாஸ், பிரபாகர், மாரிமுத்து, அரவிந்த், பொன்னுத்தாய், ஆறுமுகம் சாமி, பிச்சைகனி, கிருபாகரன், மாரியப்பன், காளியப்பன், மகேந்திரன், ஈ.பி. மாரியப்பன், கார்த்திக், பிரபு, மேல்மந்தை கிருஷ்ணன், பெரியசாமி, அதிசய பெருமாள், முனியசாமி, முருகேசன், பாலசுப்பிரமணி, கணேசன், பாலமுருகன், முருகானந்தம், சுந்தரன், சுப்பிரமணி, செல்வராஜ், சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் நடைபெற்ற இந்த அமைதிப் பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பியபடி பங்கேற்றனர்.