தூத்துக்குடியில் நடைபெற்ற நெய்தல் கலை விழா 2026 பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தன.



விழாவில் பங்கேற்ற கலைஞர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வரும் மருத்துவர் ஜெ. சைலஸ் ஜெயமணி அவர்களுக்கு சகா கலைக்குழு சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.



கலைஞர்களின் நலனில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வரும் மருத்துவர் சைலஸ் ஜெயமணியின் பணி பாராட்டுக்குரியது என சகா கலைக்குழுவினர் தெரிவித்தனர்.