தூத்துக்குடி, ஆக.25-
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் விவசாய அணி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் நலன் தொடர்பாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்துக்கு ஆதரவு



விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்ந்த தகவல்கள் மற்றும் அரசு நலத்திட்டங்களை ஒருங் கிணைந்த முறையில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.



இந்நிலையில், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை ஒருங்கிணைந்த முறையில் பெற முடியும். மேலும், அலுவலர்கள் வயல்வெளிகளுக்கே நேரடியாகச் சென்று விவசாயி களின் பிரச்சினை களை அறிந்து, அரசு நலத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கு வதற்கும் இத்திட்டம் உதவியாக இருக்கும்.



எனவே, திட்டத்தை எதிர்ப்பதற்கு பதிலாக நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் அவற்றை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



கிஷான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு முகாம்



பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியை முன்னிட்டு, பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களைத் திட்டத்தில் இணைக்க சிறப்பு முகாம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.



குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க முடிவு



மேலும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பா.ஜ.க. விவசாய அணி சார்பில் ஒருவர் பங்கேற்று, விவசாயி களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



கூட்டத்தில் விவசாய அணி துணைத் தலைவர்கள் முத்துலிங்கம், முண்டசாமி, மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மண்டல் தலைவர்கள் சிவந்திவேல், பேச்சிமுத்து, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாய அணி நிர்வாகிகளுக்கு வழிகாட்டு தல்களை வழங்கினர். மத்திய அரசின் விவசாயிகள் நலத் திட்டங்கள் கிராமப்புற விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.