தூத்துக்குடி அமுதா நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதிபிரம்ம சக்தி அம்மன் திருக்கோவில் 26-ம் ஆண்டு கொடை உற்சவ விழா மற்றும் கால் நாட்டு விழா கடந்த 14.08.2026 முதல் நடைபெற்று வருகிறது.



கொடை விழாவின் ஒரு பகுதியாக 18.08.2026 செவ்வாய்க்கிழமை கோவில் வளாகத்தில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் தர்மகர்த்தா சிவமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 50-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் செ. சரவணகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 50-வது வட்ட பிரதிநிதி G.M. செல்வம் உடனிருந்தார்.



இதில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்ன தானத்தில் பங்கேற்றனர். ஸ்ரீ ஆதிபிரம்ம சக்தி அம்மன் கோவிலின் 26-ம் ஆண்டு கொடை உற்சவ விழா 19.08.2026 புதன்கிழமை நிறைவு பெறுகிறது. நாளை காலை பொங்கல் விடுதல் மற்றும் கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.



கொடை விழாவையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.