தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம் சார்பில் சுனாமி காலனி, கணபதி நகர், சக்தி நகர் ஆகிய 3 கிளைகளில் அகண்ட பாரத ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் அகண்ட பாரதம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் சிபு, மாடசாமி, கருப்பசாமி, மாரியப்பன், கோபுரத்தான், கிருஷ்ணா, சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அகண்ட பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.