தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் நெய்தல் 2026 கலை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று இரவு வெகு சிறப்பாக நடைபெற்றன.
இதில், கடந்த 5 நெய்தல் கலை விழாக்களில் ஒயிலாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளில் சிறந்து விளங்கிய “இளம் கன்று பயமறியாது” சிவகாந்த் தனது திறமையால் பார்வை யாளர்களை கவர்ந்தார்.
சிவகாந்தின் கலைத்திறமையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பாராட்டினர்.
நெய்தல் 2026 விழாவில் பல்வேறு கிராமிய மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், சிவகாந்தின் பங்களிப்பும் கலை ஆர்வலர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.