மத்திய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது ஓட்டப்பிடாரம் ஓன்றிய செயலாளர் இளையராஜா தலையில் நடைபெற்றது.
ஏழைய எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒன்றிய அரசு நிதியின் மூலம் கொடுக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் உள்ள நிதியில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது.
இந்நிலையில் தி.மு.க தலைவர் தளபதி அறிவித்துள்ளபடி, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கழக ஒன்றிய அமைப்புகளின் சார்பில் இன்று (29.03.2025) காலை 10 மணியளவில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஓட்டப்பிடாரம் மெயின் ரோடு பஜார் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஓட்டப்பிடாரம் ஓன்றிய செயலாளர் இளைய ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
தி.மு.க மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமையில் கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
தூத்துக்குடி
மத்திய அரசை கண்டித்து தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி!!
அடுத்த
முதல்வரின் உத்தரவுக்கிணங்க முறைப்படுத்தி அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் - அமைச்சர் கீதா ஜீவன் தான் தகவல்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026