தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சிலர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. வாரியார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி மற்றும் கார் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரியிும் சில வழக்கறிஞர்கள் இன்று காலை விவிடி சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்ததாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. கடந்த (3.4.2018) அன்று நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலைகள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக சட்ட வழக்கறிஞர்கள் கோர்ட்டில் வாதாடி வருகிறார்கள். தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் நீதிமன்ற நுழைவாயில் முன்பு மட்டுமே நடத்தப்படும். வெளியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சங்கத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் என்று வழக்கறிஞர்கள் வெளியே போராட்டம் நடத்தினால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பேட்டியின் போது சங்கத்தின் துணைத் தலைவர் சிவசங்கரன், செயலாளர் செல்வின், பொருளாளர் கணேசன், இணைச் செயலாளர் பாலகுமார், முன்னாள் தலைவர் தனசேகர் டேவிட், மூத்த வழக்கறிஞர் ஏடபுள்யூடி திலக் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்பாட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தலைவர் எஸ்.பி. வாரியார் செய்தியாளர் சந்திப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் மீது எஸ்.பி.யிடம் மோசடி புகார்!!
அடுத்த
தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! மூப்பன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் காங்கிரஸ் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தின!!
19 Oct 2026
தூத்துக்குடிக்கு வந்த ஹோவர்கிராஃப்ட் கப்பல்! கடலிலும், மணலிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும் அதிசய வாகனம் – நேரில் கண்டு வியந்த ராஜா ஸ்டாலின்!!
16 Oct 2026
தனசேகரன் நகரில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு அச்சம்! பெண்கள், சிறுமிகள் நடமாட முடியாத அவலம்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? போராட்டம் வெடிக்குமா?
16 Oct 2026
சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு!!
16 Oct 2026