தூத்துக்குடிக்கு வந்துள்ள கடலிலும், நிலத்திலும் பயணிக்கக்கூடிய நவீன ஹோவர்கிராஃப்ட் கப்பலை, திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் டாக்டர் கே.பி. ராஜா ஸ்டாலின் நேரில் கண்டு ரசித்தார்.
ஹோவர்கிராஃப்ட் கப்பல் அடிப்பகுதியில் காற்றைச் செலுத்தி, காற்று மெத்தையின் மீது மிதப்பதுபோல் இயங்குகிறது. இதனால் கடல், மணற்பரப்பு, சேறு மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும் பயணிக்க முடியும்.
வெளியான தகவல்களின்படி, மணிக்கு சுமார் 96 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த வகை வாகனம், சுமார் 42 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. கடலோரக் கண்காணிப்பு, கடத்தல் தடுப்பு மற்றும் கடலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளுக்கு இது பயன்படுகிறது.
தூத்துக்குடி கடற்கரை மணற்பரப்பில் ஹோவர்கிராஃப்ட் பயணிக்கும் காட்சியை டாக்டர் கே.பி. ராஜா ஸ்டாலின் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.