தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இரண்டாவது இலவச கண் சிகிச்சை முகாம், மூப்பன்பட்டி ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.



தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. பெருமாள்சாமியின் வழிகாட்டு தலின்படி நடைபெற்ற இம்முகாமை, காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவரும், கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத் தலைவருமான வழக்கறிஞர் டி. கருப்பசாமி தொடங்கி வைத்தார். கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மூர்த்தி, நகரத் தலைவர் அருண்பாண்டியன் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முகாம் மேலாளர் ஆசை மாணிக்கம், மருத்துவக் கண் பரிசோதகர் சிஞ்சு ஆகியோர் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டனர்.



மூப்பன்பட்டி ஊர் தலைவர்கள் காளிமுத்து, பொன்மாடன் ஆகியோர் தலைமை வகித்தனர். சுதந்திரப் போராட்டத் தியாகி நல்லையா அவர்களின் படத்துக்கு மாவட்டச் செயலாளர் துரைராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிராமக் கமிட்டித் தலைவர் மகேந்திரன், செயலாளர் சச்சின், பள்ளிச் செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழுகுமலை சங்கர், முத்துராமலிங்கம், கே.டி. பிச்சைக்கனி, ராஜகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இம்முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.