தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ஜெபமணி ஜெயக்குமார் என்பவர் அதே ஊரைச் சார்ந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் பூலோகபாண்டியன் மீது மாவட்ட எஸ்.பி அல்பர்ட் ஜானிடம் மோசடி புகார் மனு அளித்தார்.
ஜெபமணி ஜெயக்குமார் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது :-
நான் குலையன்கரிசல் மேல்நிலைப்பள்ளியில் கிளார்க் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டேன். கடந்த 2024 அக்டோபர் மாதம் புதுக்கோட்டை ஊரை சேர்ந்த பூலோகபாண்டியன் என்பவருக்குச் சொந்தமான புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கடையை வாடகைக்கு கேட்டிருந்தேன். அதற்கு அவரும் சம்மதித்து (07.10.2024) அன்று காசோலை வாயிலாக ரூ.2 லட்சம் அட்வான்சாக பூலோக பாண்டியனிடம் கொடுத்தேன்.
மேற்படி கடையை பராமத்து வேலைகள் செய்து தருவதாக சொன்ன பூலோக பாண்டியன் அந்த வேலையை செய்து கொடுக்காமல் என்னை வாடகைகக்கு கடையை நடத்துங்கள், ஒருசில நாட்களில் பராமத்து வேலை செய்து கொடுப்பதாக கூறினார். ஆனால் நான் அட்வான்ஸ் கொடுத்து 10 நாட்களுக்கு மேலாகியும், பூலோக பாண்டியனிடம் எனது அட்வான்ஸ் பணம் ரூ.2 லட்சத்தை திரும்ப கேட்ட போது, அந்த கடைக்கு வேறு நபர்கள் வாடகைக்கு வந்த பின்னர் அவர்களிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கி எனக்கு கொடுப்பதாக கூறினார். நானும் ஒப்புக் கொண்டேன்.
அதன் பின்னர் ஒருசில நாட்களிலேயே மேற்படி பூலோகபாண்டியன் கடைக்கு வேறொரு நபர் டீ கடை வைத்து கொண்டார். அந்த விபரம் தெரிந்த நான் பூலோகபாண்டியனிடம் எனது அட்வான்ஸ் பணத்தை கேட்ட போது, இப்போ தருகிறேன், அப்போ தருகிறேன் என்று ஏதேதோ காரணங்கள் கூறி 10 மாதங்களை கடத்தி என்னை ஏமாற்றி வந்தார். இதனால் நான் எனது ஊர் பெரியவர்கள் மூலமாக கடந்த 2025 ஜீலை மாதம் இறுதி வாரத்தில் பூலோக பாண்டியனிடம் எனது அட்வான்ஸ் பணம் குறித்து பேசிய போது, மேற்படி பூலோக பாண்டியனிடம் அவரது வங்கி கணக்கு உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், புதுக்கோட்டை வங்கி கிளையின் காசோலை எண்கள் 251168, 251169 ஆகிய இரண்டு காசோலைகளில் ஒன்றில் (01.08.2025) தேதியிட்டு ரூபாய் 1 லடச்த்திற்கும், (06.08.2025) தேதியிட்ட ரூ.1 லட்சத்திற்கும் இரண்டு காசோலைகளை கொடுத்தார். நான் மேற்படி காசோலைகளை எனது வங்கி கணக்கு உடைய தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி குலையன்கரிசல் கிளையில் வசூலுக்கு தாக்கல் செய்தேன்.
ஆனால் மேற்படி பூலோகபாண்டியன் கொடுத்த இரண்டு காசோலைகளும் அவரது வங்கி கணக்கில் போதிய பணம் இன்றி வங்கியால்( 29.08.2025) அன்று திருப்பப்பட்டது. உடனே இதுகுறித்து நான் பூலோகபாண்டியனை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஒரு வாரம் கழித்து (09.09.2025) அன்று கொடுத்து விடுவதாக உறுதி அளித்தார். நானும் பூலோக பாண்டியனின் வார்த்தையை நம்பி அதனை ஏற்று கொண்டேன்.
பின்னர் நேற்று (09.09.2025) மாலை 6 மணியளவில் புதுக்கோட்டை பஜாரில் உள்ள அவரது அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த பூலோகபாண்டியனிடம் எனது அட்வான்ஸ் பணம் ரூ. 2 லட்சத்தை கேட்க சென்ற போது, பூலோகபாண்டியன் என்னை பார்த்து, என்னல ஒயாம காசு காசுன்று தொந்தரவு பண்ணிகிட்டு இருக்க, நான் அ.ம.மு.க. கட்சி வடக்கு மாவட்ட செயலாளர், என்கிட்டேயே நீ பணத்தை திரும்ப கேட்பியா, என்று தேவையற்ற பதில்களை கூறி, இனி நீ என்கிட்ட காசு கேட்டு வந்த நான் சார்ந்த கட்சியில இருக்கிற கூலிபடையை வச்சி ஒன்ன வெட்டி கொன்று விடுவேன், என கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, என்னை அடிப்பதற்கு முயற்சித்தார்.
நான் பயந்து போய் ஓடி வந்து விட்டேன். எனது குடும்பத்தாரிடம் நடந்த விபரத்தை கூறி தங்களிடம் இந்த புகார் மனுவினை கொடுக்கிறேன். எனவே என்னிடம் ரூ. 2 லட்சம் அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு அந்த பணத்தை திரும்ப என்னிடம் கொடுக்காமல் ஏமாற்றி, காசோலைகளை கொடுத்து நம்ப வைத்து மோசடி செய்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி எனக்கு கொலை மிரட்டல் விடுத்த மேற்படி பூலோகபாண்டியன் மீது தகுந்த சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் மீது எஸ்.பி.யிடம் மோசடி புகார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
அடுத்த
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்பாட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தலைவர் எஸ்.பி. வாரியார் செய்தியாளர் சந்திப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026