தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அபிஷேக் குப்தா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்று மாவட்ட காவல்துறையின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக மீரா ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக உள்துறைச் செயலகம் வெளியிட்டுள்ளது. மாநில காவல்துறையின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.