ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கவர்னகிரி ஊராட்சி கவர்னகிரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து அங்குள்ள ரேசன் கடைக்கு சென்று ரேசன் பொருட்களை பார்வையிட்டார். சமுதாய நலக்கூடம், ரேசன் கடை கட்டிடம், பிள்ளையார் கோவில் தெருவில் வாறுகால் வசதி, கிழக்கு தெருவில் உறிஞ்சு குழாய் ஆகிய கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர். எம்.எல்.ஏ வும் கோரிக்கை சம்பந்தமாக நேரில் சென்று பார்வையிட்ட பின் ஒவ்வொன்றாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அறிவழகன் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா ஒன்றிய பொறியாளர் பத்மாவதி மேற்பார்வையாளர் செல்வி. ஶ்ரீநிதி ஊராட்சி செயலர் ராமர் வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்கபெருமாள் கிராம நிர்வாக அலுவலர் வீரமாமுனிவர் முன்னாள் யூனியன் கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார் தங்கவேல் சக்திமுருகன் சண்முகையா சேசையா அங்கன்வாடி குழந்தைகள் பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் - மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் மீது எஸ்.பி.யிடம் மோசடி புகார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026