தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து இன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முகாமில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சந்திரபோஸ்,  கந்தசாமி, சரவணகுமார் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.