தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) அமைப்பின் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்காணி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
முக்காணி ஊராட்சியில் நடைபெற்ற இக்கிராம சபைக் கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரியின் வணிகவியல் துறை (சுயநிதிப் பாடப்பிரிவு) இரண்டாம் ஆண்டு மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கல்லூரியின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சமுதாய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், முக்காணி ஊராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து மாணவிகள் கலந்துரையாடினர். குறிப்பாக, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முக்காணி ஊராட்சி செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனித மரியன்னை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி சிபானா, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் ஆல்போன்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் செய்திருந்தனர்.
வணிகவியல் துறை பேராசிரியர் ரோஷினி மாணவிகளை வழிநடத்தினார். கிராம மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை விவாதித்து, சமூக மேம்பாட்டுப் பணிகளில் மாணவிகள் நேரடியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.