தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சித் தலைவர் ஜோசப் விஜய் சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளராக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் ஸ்ரீநாத் முதல்முறையாக இன்று தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன், பொருளாளர் சிவக்குமார், துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், கவிதா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முருகேஷ், கார்த்திக் ராஜரத்தினம், பெர்க்மான்ஸ் அந்தோணி, மாரியம்மாள், ஷாமினி, இசக்கியம்மாள் (எ) அருணா, சதீஷ்குமார், ஜோசப்துரை ஆனந்த், சித்ரா, ஜனோஜ்குமார் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக தூத்துக்குடி வரும் அமைச்சர் ஸ்ரீநாத்தை வரவேற்க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.