தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை, மாநகராட்சியின் 16ஆம் வார்டு கதிர்வேல் நகர் பகுதியில் நீர் தேங்கி பொதுமக்கள் கடும் அசௌகரியத்தில் தவித்தனர்.
மக்களிடமிருந்து தகவல் கிடைக்கும்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைக் கண்காணித்தார். மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேங்கிய நீரை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டார்.
இதன்படி, தீயணைப்புத் துறை வாகனங்கள் கதிர்வேல் நகர் பகுதிக்கு அழைக்கப்பட்டு, பம்ப் செட் மூலம் மழைநீர் வெளியேற்ற பணிகளைத் தொடங்கினர். அமைச்சர் நேரடி தலையீட்டால், அந்த பகுதியில் நீர் வேகமாக வெளியேறி, மக்களிடையே நிம்மதி நிலவுகிறது.
இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ மற்றும் பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
மழைநீர் மக்களைக் சிரமப்படுத்தாதபடி, அமைச்சர் நேரடியாக களத்தில்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் அகற்றம்: ஆணையர் ப்ரியங்கா அதிரடி நடவடிக்கை – பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டு!!
அடுத்த
மழை பாதித்த மக்களுக்கு நிம்மதி – அதிவேக நடவடிக்கையில் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! மூப்பன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் காங்கிரஸ் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தின!!
19 Oct 2026
தூத்துக்குடிக்கு வந்த ஹோவர்கிராஃப்ட் கப்பல்! கடலிலும், மணலிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும் அதிசய வாகனம் – நேரில் கண்டு வியந்த ராஜா ஸ்டாலின்!!
16 Oct 2026
தனசேகரன் நகரில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு அச்சம்! பெண்கள், சிறுமிகள் நடமாட முடியாத அவலம்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? போராட்டம் வெடிக்குமா?
16 Oct 2026
சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு!!
16 Oct 2026